டன்சினன் வீட்டு திட்டம் நாளை மறுதினம மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறும். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் பூண்டுலோய – டன்சினன் தோட்டத்தில் வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அங்குரார்ப்பண நிகழ்வின்போது இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி செய்மதி தொழில்நுட்பத்தினுடாக நேரடியாக உரையாற்றவுள்ளார். 404 வீடுகளை கொண்ட திட்டத்தில் 158 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

டன்சினன் வீட்டு திட்டம் நாளை மறுதினம மக்கள் உரிமைக்கு…
படிக்க 0 நிமிடங்கள்