விவாகரத்து வழங்குங்கள் : நீதிபதியிடம் கெஞ்சும் பிரபல ஹொலிவுட் நடிகை
Related Articles
ஹொலிவுட்ஜோடி. ஏஞ்சலினாவும் பிராட் பிட்டும் கடந்த 2004ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் 2014ம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் 2016-ம் ஆண்டில் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்தனர்.
ஏஞ்சலினா-பிராட் பிட் தம்பதிக்கு பெற்ற குழந்தைகள் 3 பேரும், வளர்ப்பு குழந்தைகள் மூன்று பேரும் உள்ள நிலையில், விவாகரத்து கோரி ஏஞ்சலினா ஜோலி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குழந்தைகளை பராமரிக்க பிராட் பிட் தனக்கு தேவையான எந்த உதவியும் செய்யவில்லை என ஜோலி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என ஜோலி நீதிபதியிடம் கெஞ்சி கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.