fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆங்கில மொழியை ஊக்குவிக்க திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 18:00

ஆங்கில மொழியை ஊக்குவிக்க திட்டம்

இலங்கை கல்வி துறையில் ஆங்கில மொழியை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தலைமையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கல்வியமைச்சும் அமெரிக்க தொண்டர் சமாதான பிரஜைகள் அமைப்பான பீஸ் கோப்ஸ் மன்றத்திற்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கல்வியமைச்சின் சார்பில் அதன் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியும், பீஸ் கோப்ஸ் நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளர் கிறிஸ் பெல் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். இவ்வொப்பந்ததின் படி அமெரிக்க தொண்டர் ஆசிரியர்கள் இலங்கைக்கு வருகை தந்து இலவசமாக ஆங்கில மொழி கல்வியை வழங்கவுள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப் கனடி இந்த பீஸ் கோப்ஸ் அமைப்பை சமாதானம் மற்றும் நட்புறவை உலகெங்கும் பரப்பும் நோக்கில் ஆரம்பித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 18:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க