fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் அற்புதமான வெற்றி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 17:45

இலங்கையின் அற்புதமான வெற்றி

தென்னாபிரிக்காவுடனான 4 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 

தென்னாபிரிக்காவுடனான இறுதியாக இடம்பெற்ற 11 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருந்தது. இவ்வாறான வரலாற்றுடன் தென்னாபிரிக்காவுடன் நேற்று இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இப்போட்டி இடம்பெற்று கொண்டிருந்த போது அடிக்கடி மழை பெய்ததால் இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்க்ட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்தி கொண்டது. பதிலளித்த தென்னாபிரிக்க அணிக்கு அடிக்கடி மழை குறுக்கிட்டதால் டக்வேத் லூயிஸ் முறைப்படி 21 ஓவர்களில் 191 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவ்’ அணி 9 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஒற்றுமையுடன் விளையாடியதால் இப்போட்டியில் வெற்றி பெற்றதாக திசர பெரேரா தெரிவித்தார்.

இப்போட்டி முடிவடைந்து 10 நிமிடத்திற்குள் மைதானத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிதறிக்கிடந்த குப்பைகளை கிரிக்கட் இரசிகர்கள் ஒரே இடத்தில் கொண்டு வந்து போடுவதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை தென்னாபிரிக்காவுடனான 20 இற்கு 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சலோ மெத்திவ்ஸ் இவ்வணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரில் இடம்பெற்ற 3 வீரர்கள் இவ்வணியில் இடம்பெறவில்லை. பிரபாத் ஜயசூரிய, நிரோசன் திக்வெல்ல, கசுன் ரஜித்த ஆகியோர் இவ்வாறு அணியில் இடம்பெறாத நிலையில் நிமேஷ் சந்திமால், ஜெப்ரி வென்டர்சி, புதுமுக வீரரான பினுர பெர்னாண்டோ ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இது இவ்வாறு இருக்க 20-20 அணியில் இலங்கை அணி சார்பில் முன்னர் சிறப்பாக விளையாடிய லசித் மாலிங்கவுக்கு வாய்ப்பளிக்க போவதாக இலங்கை கிரிக்கட்டின் பதில் தலைமை பயிற்சியாளர் டிலான் சமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் லசித் மாலிங்க இவ்வணியில் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 17:45

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo