fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

6.2 ரிக்டர் அளவீட்டில் பூகம்பம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 17:35

6.2 ரிக்டர் அளவீட்டில் பூகம்பம்

இந்தோனேஷியாவின் லொம்பொக் தீவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 6.2 ரிக்டர் அளவீட்டில் பூகம்பம் பதிவாகியுள்ளது.

பூகம்பத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பூகம்பத்தின் சேதங்களை சீர்செய்யும் நேரம் அடுத்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்புக்கள் பாலி தீவிலும் உணரப்பட்டுள்ளது. லொம்பொக் தீவில் கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்ற பூகம்பத்தினால் 347 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என இடர் முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 1400 பேர் காயமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்தோருக்கு தேவையான உணவு மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருவதுடன், சர்வதேச உதவியும் கிடைத்துள்ளது. லொம்பொக் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் உட்பட 80 சதவீதமான உடமைகள் சேதம் அடைந்துள்ளன. சில இடங்களை சென்றடைவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 17:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க