fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சித்தாரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2018 21:35

சித்தாரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

8 வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழில் ரீதியில் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது. 2018 ம் வருடத்திற்கான இலத்திரனியல் ஊடக துறைக்காக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சித்தாரா களுஆரச்சி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பல்வேறு துறைகளில் தமது திறமைகளை வெளிக்காட்டிய பெண்கள் இங்கு கௌரவிக்கப்பட்டனர். தேசிய மற்றும் கிராமிய மட்டத்தில் பெண்களை வலுவூட்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறந்த தொழில் ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 50 பெண்கள் இங்கு விருதினை பெற்றுக்கொண்டனர். ஊடகத்துறையில் தங்கப்பதக்கம் ஐரிஎன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சித்தாரா களுஆராய்ச்சிக்கு கிடைத்தது. ஐரிஎன் நிறுவனத்தின் எத்பௌர என்டர்பிரைஷ் ஸ்ரீ லங்கா, சம்பாசனை யார் உண்மை சொல்வது வெள்ளிக்கிழமை மல்பாற உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சித்தாரா களுஆராய்ச்சி செயற்படுகிறார். உலக வங்கியின் உறுப்பினராக செயற்படும் சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் வுமன் இன் மெனஜ்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர்கள் கலந்துகொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2018 21:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க