fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கலைஞர் உலகுக்கு விடை கொடுத்தார்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 19:03

கலைஞர் உலகுக்கு விடை கொடுத்தார்

தமிழக முன்னாள் முதல்வரும் கலைஞருமான கருணாநிதி கடந்த சில தினங்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தனது 94ஆவது வயதில் சற்று முன்னர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

1924.06.03ஆம் திகதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் தன் பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார்.இவரது இயற்பெயர் தட்சினா மூர்த்தி.
சிறு வயது முதலே தமிழ் மொழியை தன் உயிராக காதலித்து வந்த அவர் தான் வாழ்ந்த காலத்தில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன்னாலான பல சேவைகளை ஆற்றியுள்ளார்.சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர் திரைப்பட இயக்குனர் அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.மாணவ நேசன் எனும் இதழே அவர் முதன் முதலாக துவங்கிய பத்திரிகையின் பெயர்.
கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம் ‘பழனியப்பன்’. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.
கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.
1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி 2011ல் வெளியான பொன்னர் – சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார்

கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதியஇ ‘தூக்குமேடை’ என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்
1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்
45 ஆவது வயதில் முதலமைச்சரானார். இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில் .
60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும்இ ஆதரவாளர்களையும் வழிநடாத்தியவர் கருணாநிதி அவர்கள்.
நீதி கட்சியின் உறுப்பினராக இருந்து 961ல் தி.மு.க. கட்சியில் சேர்ந்தார் பின்னர் அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது கருணாநிதி அவர்கள் ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு வந்தார்.
கருணாநிதி அவர்கள் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்கு எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார். அவரது முதல் மனைவி திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார். கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்களே அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு பிறந்தவர் தான் கனிமொழி
ஐந்து தடவைகள் முதலமைச்சரானார். கலைஞர் கருணாநிதி அவர்களே உங்கள் ஆத்மா சாந்தி அடைய நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 19:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க