fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 13:23

கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்

இந்திய திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. வயது முதிர்வு காரணமாக அவரின் உடல் உறுப்புக்களின் இயக்கத்தை பராமரிப்பது கடினமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் அவரது உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அவரது உடல்நிலை வழங்கும் ஒத்துழைப்பை பொறுத்தே எதையும் கூறமுடியுமென காவிரி மருத்துவமனை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தி.மு.க தலைவரின் இந்நிலையால் கவலையடைந்துள்ள ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க