தேசிய நிலைபேறான அபிவிருத்தி கலந்துரையாடல் இன்று வெளியீடு
Related Articles
தேசிய நிலைபேறான அபிவிருத்தி பற்றிய கருத்தாடல் இன்று வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும். 2030 ம் ஆண்டளவில் இலங்கையை நிலைபேறான தேசமாக மாற்றுவதற்கான உபாயங்களை கண்டறிவதற்கான ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவினால் தொகுக்கப்பட்ட தேசிய நிலைபேறான அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலே இன்று வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்துகொள்வதற்கென ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குழுவின் செயலாளரும் ஜனாதிபதி செயலாளருமான உதய ஆர் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக அபிவிருத்தி ஊடாக இலங்கையை முன்னொக்கி கொண்டு செல்வதற்கு தேவையான உபாயங்கள் குறித்த கருத்தாடலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.