fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2018 15:17

காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

இன்றும் நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று நாட்டிலும், அதனைச் சூழவுள்ள கடற்பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் தென்கிழக்குக் கடற்கரைப் பிரதேசங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும். காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும். மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலநறுவை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசலாம் என்று, திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை அறிக்கை இன்று நண்பகல் வெளியிடப்பட்டது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2018 15:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க