fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கெனடாவுடன் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முடக்கவுள்ளதாக சவுதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2018 11:40

கெனடாவுடன் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முடக்கவுள்ளதாக சவுதி தெரிவிப்பு

கெனடாவுடன் காணப்படும் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முடக்கவுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. தமது நாட்டு உள்விவகாரங்களில் கெனடா தலையிடுவதாக சவுதி அரசு குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கமைய தமது நாட்டிலுள்ள கெனடா தூதுவரை வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் கெனடாவிலுள்ள தமது நாட்டிற்கான தூதுவரையும் மீள வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக சவுதி அரசு குறிப்பிட்டுள்ளது. சவுதியில் மனித உரிமை ஆர்வலர்களின் கைது நடவடிக்கை குறித்து தாம் அவதானம் செலுத்தியுள்ளதாக கெனடா அண்மையில் அறிவித்தது. இதனையடுத்தே சவுதி கெனடாவுடனான வர்த்தக உறவுகளை முடக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2018 11:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க