அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்கள் தொடர்பில் பின்பற்றும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறித்த செயற்பாடானது ஊடக சுதந்திரத்தை நேரடியாக பாதிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் குறித்த குற்றச்சாட்டை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.