அயிஸ் எனப்படும் போதைப்பொருளுடன் இந்திய பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே 878 கிராம் அயிஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைதாகியுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அயிஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
படிக்க 0 நிமிடங்கள்