fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலாந்து அணி விளையாடும் 1000மாவது டெஸ்ட் போட்டி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2018 17:21

இங்கிலாந்து அணி விளையாடும் 1000மாவது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது போட்டி நேற்று இங்கிலாந்தின் பேமிங்ஹம்மில் ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஜோ ரூட் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.ரவிச்சந்திர அஸ்வின் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார். தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை 3 விக்கட்டுக்களை இழந்த61 ஓட்டங்களை பெற்றுள்ளது.ஷிகர் தவான் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இது இங்கிலாந்து அணி விளையாடும் 1000மாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முதலாக தனது முதலாவது டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1877 ஆம் ஆண்டு விளையாடியது.

357 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளதுடன் 297 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.இங்கிலாந்து விளையாடிய 345 டெஸ்ட் போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2018 17:21

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க