fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ் மாவட்ட பொலிசாருக்கு காலவரையின்றி விடுமுறைகள் இரத்து

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2018 15:28

யாழ் மாவட்ட பொலிசாருக்கு காலவரையின்றி விடுமுறைகள் இரத்து

யாழ் மாவட்ட பொலிசாருக்கு காலவரையின்றி விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக யாழில் சில குழுக்கள் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றன. காரணமின்றி பல வீடுகள் தாக்கப்பட்டுள்ளதுடன் கிராம அலுவலர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவர்களை கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுப்பட்டு வருதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வன்முறைகளை முற்றாக இல்லாமல் செய்யவதற்கான நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய வீதிகளில் அநாவசியமாக நடமாடும் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களை கைதுசெய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2018 15:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo