கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தங்கல்லை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேக நபர்கள் கோக்கல மற்றும் பெரகல பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். அதிவேக வீதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கென பயன்படுத்தப்படும் சொத்துக்களை கொள்ளையிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 7 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்