இம்ரான் கானின் பதவியேற்பு நிகழ்வு : அரச தலைவர்களை அழைப்பது தொடர்பில் கவனம்
Related Articles
இம்ரான் கானின் பதவியேற்பு நிகழ்வுக்கு தெற்காசிய அரச தலைவர்களை அழைப்பது தொடர்பில் பி.டி.ஐ. கட்சி கவனம் செலுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி, மற்றும் சீனா, துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும்; நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு கட்சி பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். பிரதமர் நரேந்த்ர மோதி, பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்கவுள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்தவுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அவரது பதவியேற்பு நிகழ்வுக்கு இந்தியாவின் பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.