எழுச்சிப்பெரும் பொலன்னறுவை திட்டத்தின் கீழ் மேலும் பல அபிவிருத்தி பணிகள் இன்றும் மக்களின் பயன்பாட்டுக்காக..
Related Articles
எழுச்சிப்பெரும் பொலன்னறுவை வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேலும் பல அபிவிருத்தி பணிகள் இன்றும் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்படுகின்றன. 6 ஆயிரம் கோடி ரூபா செலவில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் நிறைவடைந்துள்ள 180 அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஆரம்பமானது. நேற்றைய தினம் 46 அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று காலை 06.30 மணிக்கு பொலன்னறுவை மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள நடைபாதையை ஜனாதிபதி திறந்துவைத்தார். மேலும் பல்வேறு அபிவிருத்தி பணிகள் இன்று மக்களின் உரிமைக்காக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.