ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மராத்தான் போட்டி ஒன்றில் மனிதர்களுடன் நாய் ஒன்றும் கலந்துகொண்டுள்ளது . அதில் 21 கி.மீ. தூரம் ஓட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் அனைவரும் ஒடினார்கள். அவர்களுடன் சேர்ந்த ஒரு நாயும் ஓடியது. போட்டியாளர்களுடன் அந்த நாய் இறுதிவரை ஓடி முடித்தது. எனவே, அந்த நாய்க்கு பதக்கம் வழங்கப்பட்டது.