fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எழுச்சிப்பெறும் பொலன்னறுவை 180 அபிவிருத்தி திட்டங்கள் இன்று முதல் மக்களிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2018 11:59

எழுச்சிப்பெறும் பொலன்னறுவை 180 அபிவிருத்தி திட்டங்கள் இன்று முதல் மக்களிடம் கையளிப்பு

எழுச்சிப்பெறும் பொலன்னறுவை வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. நிர்மாண பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள 180 அபிவிருத்தி திட்டங்கள் இன்று முதல் நாளை மறுதினம் வரை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

அதற்கமைய இன்று ஜனாதிபதி தலைமையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் உரிமைக்காக கையளிக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை 09.00 மணிமுதல், இடம்பெற்று வரும் நிகழ்வில் முதலாவதாக திவுலங்கடவல மத்திய மகா வித்தியாலயம், மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலை, மெதிரிகிரிய தேசிய பாடசாலை ஆகியவற்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டன.

அதேபோல் முற்பகல் 10.30 மணிக்கு மெதிரிகிரிய பிரதான பஸ் தரிப்பிடம் மக்களின் உரிமைக்காக திறந்துவைக்கப்பட்டது. அதேபோல் மெதிரிகிரிய நீர்ப்பாசன திட்டமும் மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்டது. அதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் எழுச்சிப்பெறும் பொலன்னறுவை திட்டத்தின் கீழ் நிர்மாண பணிகள் நிறைவடைந்துள்ள 46 வேலைத்திட்டங்கள் மக்களின் உரிமைக்காக திறந்துவைக்கப்படவுள்ளன. இங்குரங்கொட, மெதிரிகிரிய மற்றும் ஹெலஹெர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளை மையப்படுத்தியே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள 46 வேலைத்திட்டங்களே இவ்வாறு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படுகின்றன. மேலும் எழுச்சிப்பெறும் பொலன்னறுவை திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டம் முழுவதும் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கென அரசாங்கம் 6 ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. 85 பாடசாலைகளின் பௌதீக வளங்களை மேம்படுத்தும் திட்டம், சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டம், வைத்தியசாலைகளுக்கான மேலதிக கட்டிடங்கள் மற்றும் சிறுநீரக நோய்ப்பிரிவு உள்ளிட்டவற்றை அமைக்கும் திட்டம், அதேபோல் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் என 180க்கும் அதிகமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பொன்னறுவை மாவட்டத்தில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளையும், நாளை மறுதினமும் பல்வேறு வேலைத்திட்டங்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் மக்களின் உரிமைக்காக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரின் தலைமையில் வழங்கி வைக்கப்படவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2018 11:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க