நாட்டின் 8 மாவட்டங்களில் இன்று ஓரளவு பலத்த காற்று வீச கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அதனை போன்று காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும். விசேடமாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் 50 மில்லி மீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்ய கூடும். அதேபோன்று அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சிறியளவில் மழை பெய்யலாம். ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பிற்பகல் வேளைகளில் மழையோ? அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும், ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, மாத்தளை, பொலன்னறுவை, அநுராதபுரம், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடி மின்னர் தாக்கங்களினால் ஏற்பட கூடிய அனர்த்தங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.