fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீன கம்பனிகளிடம் முன்னாள் ஜனாதிபதி பணம் பெற்றுக்கொண்டதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2018 15:19

சீன கம்பனிகளிடம் முன்னாள் ஜனாதிபதி பணம் பெற்றுக்கொண்டதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையில் பாரியளவில் நிர்மாணங்களை மேற்கொண்ட சகல சீன கம்பனிகளிடமும் பணம் பெற்றுக் கொண்டதாக ஜேவிபி குற்றஞ்சாட்டுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டத்திலும் அம்முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் இது குறித்து தெரிவித்திருந்தனர்.

மகிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த வாரம் முதுகுவலி காணப்பட்டதால் சிங்கப்பூர் சென்று வந்தார். முதுகுவலிக்காக அவர் சிங்கப்பூர் சென்றார் நாங்கள் என்னை தேய்த்துக் கொள்வோம். அவர்களுக்காகவே அவர்கள் ஆட்சியமைத்து கொண்டார்கள். மக்களுக்காகவே ஆட்சியமைக்க வேண்டுமென நாம் கூறுகின்றோம். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷவிற்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 110 கோடி ரூபா சீன கம்பனியினால் வழங்கப்பட்டதாக தெரிய வந்தது. பாரியளவிலான காசோலைகள், காசோலை இலக்கம், அதன் பிரதிகள் வங்கியில் மாற்றியவரின் பெயர், மாற்றப்பட்டு வைப்பிலிடப்பட்ட வங்கி கணக்கு இவை அனைத்தும் அண்மையில்’ பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன. துறைமுகத்தை நிர்மாணித்த கம்பனி, விமான நிலையத்தை நிர்மாணித்த கம்பனி, நுரைச்சோலையை நிர்மாணித்த கம்பனி, இவை அனைத்தும் மகிந்தவுக்கு பணம் வழங்கியுள்ளன. இவை அனைத்தையும் தயாரித்தது பணத்தை பெற்றுக் கொள்வதற்காகவே என்ற சந்தேகம் எமக்கு எழுவதில்லையா? என பா.உ. அனுர குமார திசாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

 

ஒரு தொகுதி திருடப்பட்டது. ஒரு தொகுதியினால் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. பெரும்மளவிலான கடன் சுமை. துறைமுகத்திலிருந்து எவ்வித வருமானமும் இல்லை. பெற்றுக் கொள்ளப்பட்ட கடனுக்கு வட்டி செலுத்த மு:டியாத நிலை காணப்படுகின்றது. வட்டியை திருப்பி செலுத்துமாறு சீன கம்பனிகள் கூறுகின்றன. துறைமுகம் சீனாவுக்கு கடன் சுமை எம்மீது சுமத்தப்படுகின்றது. துறைமுகம் எமக்கு சொந்தமில்லை. கடன் பெற்றுக் கொள்ளப்பட்டே அனைத்து நிர்மாண பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. கடன் பெற்று பெற்று, அதன் அரைவாசி திருடப்பட்டது. இப்போது, மீள முடியாத கடன் சுமை காணப்படுகின்றது  என ரில்வின் சில்வா தெரிவித்தார்.

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2018 15:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க