பகிடிவதைக்கெதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய பகிடிவதைகளில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைதண்டனையும் விதிக்க முடியும். பகிடிவதைக்கெதிராக சட்டத்துக்கு எதிராக நடந்துகொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து சகல பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை பெற்றோரும் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமது பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டுமென அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பகிடிவதைக்கெதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்