இந்தியாவில் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கென 12 வயதுக்குட்பட்டவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவோருக்கு மரணதண்டனையும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வோருக்கு 7 முதல் 10 ஆண்டு வரையான சிறைத்தண்டனையும் வழங்கப்படவுள்ளது. 12 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வோருக்கு 10 முதல் 20 ஆண்டுகள் அல்லது வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்படுமென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் சிறுவர் பாலியல் குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம்
படிக்க 0 நிமிடங்கள்