Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
சிறைக்கூடம் ஓர் கலைக்கூடம்
Related Articles
ஏதேனும் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றம் புனர்வாழ்வு பெற்று மீண்டும் சமூகத்துடன் இணைவதற்காகவே குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படுகின்றது. இதனால் சிறைக்கூடம் என்பது ஒரு வகையான கலைகூடமாகும்.
ஒருவர் விருப்பதுடன் சிறைக்கு செல்வதில்லை. வறுமை, இயலாமை, போதிய பராமரிப்பு இன்மை, கலாசார பின்னணி, திடீர் முடிவுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் குற்றவாளிகளாக மாறலாம். அவ்வாறு குற்றம்புரிந்து சிறைகூடம் செல்லும் கைதி தனது தண்டனை காலம் மு:டித்து சமூகத்துடன் இணைந்து மீண்டும், மீண்டும் அதேகுற்றத்தை புரிவதாக இருந்தால் அது நாட்டின் சமூக அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்தலாம். இதனால் புனர்வாழ்வு என்பது ஒரு அத்தியவசிய விடயமாகும். எனினும் இந்த செயல்பாடு தன்மீதும் சமூகத்தின் மீதும் உலகத்தின் மீதும் சிறந்த கோட்பாடுகளை கட்டியெழுப்புவதன் ஊடாக வழங்கப்பட வேண்டும். அதற்கான வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கடந்த பல ஆண்டுகளுக்கும் முன்னர் நாம் அடிமைத்தனத்தை நிராகரித்தோம். அவ்வாறான சமூகத்தில் நாம் தொடர்ந்தும் கைதிகளை அடிமைகளாக கருத முடியாது. கைதிகளின் தண்டனை வகை, அல்லது தண்டனை காலம் பற்றி நாம் நோக்காமல் அக்காலப்பகுதியில் அவர்கள் சமூகத்தில் சிறந்த நற்பிரஜைகளாக உருவாகினார்களா என்பதை தான் நோக்க வேண்டும். இதற்காக கைதிகளுக்கு சமூகத்தில் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கும் வசதிகள் வழங்கப்படுவது தொடர்பாக சிலர் விமர்சிக்கின்றனர். அண்மையில் கைதிகளுக்கு தேகப்பியாசத்திற்கான உபகரணங்கள் வழங்கப்படுவது தொடர்பாக சிலர் கண்டன ரீதியான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். கைதிகளும் மனிதர்களே அவர்களும் இந்த சமூகத்தின் பங்காளர்கள் என்ற உணர்வை வெளிக்காட்டுவதற்காகவே நாம் இவ்விடயத்தை சமர்ப்பித்தோம்.