fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம்பெறுகின்றன

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2018 10:58

தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம்பெறுகின்றன

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான நிர்மாண பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி வசதியாக பயணிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வீதி நிர்மாணிக்கப்படுகின்றது. பயணத்திற்கான கால விரயத்தை குறைத்து அபிவிருத்திக்கு நேரடி பங்களிப்பை வழங்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான அதிவேக பாதையின் 2 ஆம் கட்டம் பெலியத்த முதல் அங்குனுகொல பெலஸ்ஸ வரை இடம்பெறும். இது 26 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டதாகும். 45 சதவீதமான நிர்மாண பணிகள் பூர்தி;தியடைந்துள்ளன. இதற்கென 55.2 பில்லியன் ரூபா செலவிடப்படும்;. கசாகல, அங்குனுகொலபெலஸ்ஸ, மித்தெனிய ஆகிய பகுதிகளின் பிரவேச வீதிகள் அடங்கியதாக சீன கம்பனியினால் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. சீனாவின் எக்சின் வங்கி இதற்கு நிதியுதவியளிக்கின்றது. பல நீர் ஊற்றுக்கள் கொண்ட பகுதிகள் ஊடாக அதிவேக பாதையின் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருவதாக அதன் திட்ட பணிப்பாளர் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிர்மாண பணிகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளின் வசதி கருதி சர்வதேச மட்டத்திலான வசதிகளை கொண்ட சேவை நிலையம் ஒன்றும் இங்கு ஏற்படுத்தப்படுகின்றது. இலங்கை வீதி அதிபிவிருத்தியின் புதிய திருப்பு முணையாக மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான அதிவேக பாதை நிர்மாணிக்கப்படுகின்றது. பல்வேறு அணுகுமுறைகளை கொண்டு அமைக்கப்படும் இவ் அதிவேக பாதை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களின்; மற்றொரு கட்டமாகும்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2018 10:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க