fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை-கல்வியமைச்சு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2018 19:00

திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை-கல்வியமைச்சு

தேசிய பாடசாலைகள், அபாய நிலையில் அதிபர்கள் வெளியேற்றம், எனும் தலைப்பில் இன்று ஞாயிறு திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது போன்ற ஒரு அபாய நிலைக்கு அதிபர்கள் முகம் கொடுக்கவில்லையென்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

அதிபர் இடமாற்றம் தொடர்பாக இன்று பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு தொழிலுக்கு சென்றாலும் இடமாற்ற கொள்கையொன்று உள்ளது. 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என ஒரே பாடாசலையில் பணியாற்றிய ஆசிரியர்கள் இருந்தனர். 30 வருடங்களுக்கு பின்னர் 10 ஆண்டுகளுக்க மேல் பணியாற்றிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்தோம். இதுவொரு தனிப்பட்;ட நிகழ்ச்சி நிரல் இல்லை. அதிபர்களை பொருத்த வரையில் திறமையானவர்கள் உள்ளனர். மேலும் திறமைசாளிகள் அவ்விடங்களுக்கு வர முயற்சிக்கின்றனர். 8 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அதிபர்களை இடமாற்றம் செய்யத தீர்மானித்தோம். இங்கு அனுபவத்திற்கு புள்ளி வழங்குவதை போன்று திறமைகளுக்கும் புள்ளி வழங்கப்படுகின்றது, திறமைகளுக்கே முன்னுரிமை அளிப்போம். அனுபவமுள்ளவர்களாக இருக்கலாம் ஆனால் பாமடசாலையொன்றை நிருவகிக்க முடியாதிருந்தால் அதில் பயனில்லை. எமக்கு சிறந்த அதிபர்களே தேவை. அதற்கான கொள்கைகளை முன்னெடுக்கின்றோம். அரசசேவை ஆணைக்குழு உள்ளிட்ட ஏனைய அனைத்து பிரிவுகளும் இதனை அங்கீகரித்துள்ளன. இது போன்ற சிறந்த விடயங்களை செய்வதற்கு முயற்சிக்கும் போது அதனை சீர்குலைக்க முற்பட கூடாது. ஊடகங்களாக இருக்கலாம் அவை அரசியல் செய்யலாம். எங்களை வீடுகளுக்கும் அனுப்பலாம் யாரோ வரக்கூடிய அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்புடன் சரியான முடிவுகளை எடுக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதனை எதிர்ப்பவர்களின் சந்ததிகளுக்கு கூடு இது பாதிப்பை செலுத்தலாம். அதனை மறந்து விட வேண்டாமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு விசாகா, தேவிபாலிகா, கம்பஹாரத்னாவெலி, கண்டி புஷ்பதான உயர் மகளிர் கல்ல}ரி, மாத்தறை சுஜாதா உள்ளிட்ட 20 பாடசாலைகளின் அதிபர்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஞாயிறு திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சகல அதிபர்களையும் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு கொள்கையளவில் தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரே பாடசாலையில் நீண்ட காலம் பணியாற்றும் போது சில அதிபர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதனால் பிள்ளைகளின் நலன் கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாக தற்போது இடமாற்ற முறைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட போதும் கடந்த ஆட்சி காலத்தில் முறையான இடமாற்றங்கள் இடம்பெறவில்லையென்றும்ஸ்ரீ கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அரச சேவை உட்பட கல்வி நிர்வாக சேவையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடமாற்றங்கள் இடம்பெறுகின்றன. எனினும் கடந்த காலங்களில் இவ் இடமாற்றங்கள் அரசியல் உறவுகளுக்கு ஏற்ப இடம்பெற்றுள்ளன. அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் தலையீட்டினால் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் ஒரே பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. கல்வி நிர்வாக சேவையில் ஒரே இடத்தில் 8 ஆண்டுகளுக்க மேல் பணிபுரிந்த அதிகாரிகளை இ;டமாற்ற அனுமதி கிடைத்துள்ளது. இம்முறைகளுக்கு புறம்பமாக இடமாற்றங்கள் இடம்பெறவில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள அழுத்தம் பிரயோகிக்கும் சிலர் அக்கோரிக்கைகள் நிறைவேறாத போது பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2018 19:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க