என்னது டாக்டரா ? தமன்னா ஆவேசம்
Related Articles
முன்னணி நடிகையான தமன்னா விரைவில் டாக்டர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் சமூகவலைத்தளத்திலும் இச்செய்தி பரவலாக பகிரப்பட்டு வந்தது. இதையறிந்த தமன்னா, தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஒருநாள் நடிகர், மற்றொரு நாள் கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டர். இந்த வதந்திகள் நான் ஏதோ கணவரை தேடி கடைகடையாக அலைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆதாரமற்ற செய்திகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என ஆவேசமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.