கொழும்பின் சில பகுதிகளில் இன்று இடைக்கிடையே மின்சாரம் துண்டிக்கப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும். கொழும்பு 3, 4, 5, 7 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் இடைக்கிடையே மின்சாரம் துண்டிக்கப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் 132 கிலோ வோட் மின்சார கட்டமைப்பில் மேம்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் இடைக்கிடையே மின் விநியோகத்தை துண்டிக்கும் தேவை காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இடைக்கிடையே மின்சார துண்டிப்பு
படிக்க 0 நிமிடங்கள்