fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிக நூல்களை வாசிக்கும் சிறைக்கைதிகளின் தண்டனையை குறைக்க ஆலோசனை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2018 16:05

அதிக நூல்களை வாசிக்கும் சிறைக்கைதிகளின் தண்டனையை குறைக்க ஆலோசனை

சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் 30 மத்திய நிலையங்களில் நூலகங்களை அமைக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக 10 சிறைச்சாலைகளில் நூலகங்கள் அமைக்கப்படுமென அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அறநெறி பாடசாலை இறுதிப்பரீட்சையில் தோன்றி சித்தியடைந்த கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதியொருவர் எழுதிய நூலொன்றும் வெளியிடப்பட்டது. அதிகளவான நூல்களை வாசிக்கும் சிறைக்கைதிகளின் தண்டனைக்காலத்தை குறைக்கும் வேலைத்திட்டமொன்றை முன்மொழியவும் உத்தேசித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நீதியமைச்சருடன் இணைந்து திட்டத்தை தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2018 16:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க