fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 25, 2018 19:08

உலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம்

உலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டுவருதே தமது நோக்கமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை தொடர்பான மாநாட்டின் பிரதான அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். எமது நாட்டின் வலுவிழந்து சரிந்து காணப்பட்ட நிதித்துறையினை நாம் சக்திமிக்கதாக்கினோம். அரசியல் அழுத்தங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொலைபேசி அழைப்புகளின் ஊடாக நீதிபதிகளுக்கு தீர்ப்பு வழங்கும் நிர்ப்பந்தம் காணப்பட்ட காலத்தை நாம் இல்லாதொழித்தோம். நாம் ஆணைக்குழுக்களை சக்திமிக்கதாக்கினோம். அரசியல் அழுத்தங்கள் இன்றி செயற்பட வழிவகுத்தோம். அதேபோல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்களை நாம் சக்திமிக்கதாக்கினோம். புதிய திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதற்கென விசேடமாக சிறந்த கல்வித்தகைமை கொண்ட பயிற்றுவிக்கப்பட்ட அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

அதற்கமைய நாம் எமது நாட்டில் ஊழலுக்கு எதிராக செயற்படும் வழிமுறைகளை சக்திமிக்கதாக முன்னெடுத்தோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய ரீதியில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புக்களின் இணக்கப்பாடுகளுக்கமைய ஒத்துழைத்து செயற்படும் நாடுகளுடன் நாம் சிறந்த உறவை பேணி இந்நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தேவையினையும் உணர்ந்துள்ளதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். உலக நாடுகளில் இடம்பெறும் ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களை சக்திமிக்கதாக்கும் நோக்கில் கடந்த 2012ம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய இம்மாநாடு நடைபெறுகிறது. இதில் 82 நாடுகளின் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன. இந்நிலையிலேயே இம்முறை இம்மாநாடு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 25, 2018 19:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க