மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது
Related Articles
மொனராகலை பிரதேசத்தில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வரலாறு மற்றும் தகவல் தொழிநுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியை வீடொன்றுக்கு அழைத்த ஆசிரியர்கள் மாணவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேக நபரில் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் எடுத்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆசிரியர் இதற்கு முன்னரும் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மொனராகலை குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.