fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வறட்சியினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நுண்கடன் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடனை இரத்து செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2018 20:43

வறட்சியினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நுண்கடன் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடனை இரத்து செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

வறட்சியினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நுண்கடன் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடனை இரத்து செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒரு இலட்சம் ரூபா வரையிலான கடன்களை இவ்வாறு இரத்து செய்வதற்கு நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அண்மை காலத்தில் ஏற்பட்ட வறட்சியினால் ஐந்து போகங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு நுண்கடன் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட நுகர்வுக்கு அல்லாத கடன்கள் இவ்வாறு இரத்து செய்யப்படும். திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைதீவு கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்கும். குறித்த நிதி நிறுவனங்னிளால் எதிர்காலத்தில் வழங்கப்படும் சகல கடன்களுக்கும் 30 சதவீதத்திற்கு மேற்படாத வட்டியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை நுண்கடன் சார்ந்தோர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள நுகர்வுக்கு அல்லாத நுண்கடன்கள் இவ்வாறு இரத்து செய்யப்படும். இந்த கடன்களுக்கான அறவிடப்படும் வட்டி குறித்த நிதி நிறுவனங்களினால் இரத்து செய்யப்படும். நுண்கடன் நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் ரூபா வரையிலான கடன் திறைசேரியினால் குறித்த நிறுவனங்களுக்கு செலுத்தப்படும். இதற்கென 500 மில்லியன் ரூபாவை நிதி மற்றும் ஊடக துறை அமைச்சின் கீழுள்ள அபிவிருத்தி நிதி திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கடன் சலுகை பெறுவோருக்கு என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வட்டி நிவார திட்டத்தின் கீழ் கடன் பெற்று கொள்வதில் முன்னுரிமை அளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடனை மீள செலுத்த ஈராண்டு கால சலுகையும் வழங்கப்படும். அத்துடன் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களில் இவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும். சிலருக்கு நுண்கடன் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடனுக்கு அதிகூடிய வட்டியை செலுத்த வேண்டியேற்பட்டிருந்தது. இதேநேரம் நுண்கடன் பெறுவோருக்கான ஒழுக்கநெறி கோவையை வெளியிடும் நிகழ்வு கலாநிதி அமைச்சர் சரத் அமுனுகம, இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. இந்த ஒழுக்க நெறிகள் நுண்கடன் நிறுவனங்களுக்கு கௌரவமான வர்த்தகத்தை முன்னெடுத்து செல்வதற்கு வாய்ப்பு கிட்டும்.

இது தொடர்பாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கருத்து தெரிவிக்ககையில்

நுண்கடன்களை பெற்று பாதிக்கப்பட்ட பலர் இருக்கின்றனர். 12 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நான்கு போகங்களில் விவசாயத்தில் பாதிப்படைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் எமது சகோதர மக்கள். ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவாக நுண்கடன் பெற்ற மக்களின் கடன்களை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2018 20:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க