தற்போது நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சிலர் குற்றம் சுமத்திய போதிலும் 2013ஆம் ஆண்டு மாத்திரம் 55 ஆயிரம் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போது அது துரிதமாக குறைவடைந்துள்ளதாக கதிர்காமத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் இங்கு உரையாற்றிய அமைச்சர்,
குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை தரவு ரீதியாக நோக்கும் போது அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த நாட்டில் அதிக குற்றச்டிசெயல்கள் 2013 ஆண்டு இடம்பெற்றுள்ளது. அவ்வாண்டு 55 ஆயிரம் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வாண்டு மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்தனர். எமது காலத்தில் எவ்வித குற்றச்செல்களும் இல்லையென அவர்களால் கூற முடியாது. நாமும் அப்போது அந்த அரசாங்கத்திலேயே இருந்தோம். கடந்த ஆண்டு 30 ஆயிரம் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. அன்று 55 ஆயிரம் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. படுகொலை, கடத்தல் போதை பொருள் தொடர்பான குற்றங்கள் அன்று காணப்பட்டன. அதேபோன்று நாம் அனைவருக்கும் தெரிந்த விடயம். அரசாங்கத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பல்களும், தொடர்புபடாத பாதாள உலக கும்பல்களும் காணப்பட்டார்கள். அவர்களே ஒழிக்கப்பட்டார்கள். அரசாங்கத்துடன் தொடர்புடைய போதை பொருள் கடத்தல்காரர்கள் இருந்தார்கள். அரசாங்கத்துடன் தொடர்புப்படாத போதை பொருள் கடத்தல்கார்கள் கடத்தப்பட்டார்கள். அத்தோடு அரசாங்கத்துடன் தொடர்புப்பட்ட எத்தனோல் கடத்தல்கார்ரகள் பாதுக்காக்கப்பட்டார்கள். தொடர்புப்படாதவர்கள் ஒழிக்கப்பட்டார்கள். இன்று அவ்வாறு இல்லை. அவ்வாறு இருப்பதாக எவரேனும் நிருபித்தால் அப்போது அரசாங்கம் சட்டத்தை உரிய முறையில் நிiவேவேற்றும். இன்று அமைச்சர்களுக்கும் சட்டம் கடுமையாக நிலைநிறுத்தப்படுவது இந்த அரசாங்கத்தின் விசேட தன்மையாகும். மஹிந்த ராஜபக்ஷ காலத்i;த போன்று போதை பொருள் கடத்தல்காரர்களை பாதுகாப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கு செல்வதில்லை. வெள்ளை வேன் இல்லை. பாதை ஓரங்களில் படுகொலைகள் இடம்பெறுவதில்லை. போதை பொருள் கடத்தல்காரர்களை எவரும் பாதுகாப்பது இல்லை. அன்றும் இவ்வாறு, இன்றும் இவ்வாறு என்று பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டாம். இன்று போதை பொருள்கடத்தல்காரர்களுக்கோ, பாதாள உலக கும்பல்களுக்கோ இடமில்லை. அமைச்சர்கள் எவரும் இதில் தொடர்புப்பட்டிருந்தால் நிருபியுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.