இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றியீட்டி 2-0 எனும் அடிப்படையில் இலங்கை டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டுள்ளது.2ஆவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் 20ஆம் திகதி ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதனடிப்படையில் தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.தென்னாபிரிக்கா அணி தனது முதலாவது இன்னிங்சில் 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.490 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய தென்னாபிரிக்கா 290 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 199 ஓட்டங்களனால் தோல்வியை தழுவியுள்ளது.ரங்கனஹேரத் 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.பேட்டி நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் திமுத் கருணாரத்ன தெரிவானார்.இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி மீண்டும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தொன்றை வழங்கியுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தெடரின் முதலாவது போட்டி தம்புள்ளையில் எதிர்வரும் 29ஆம் திகதி பகல் போட்டியாக இடம்பெறவுள்ளது.