மட்டக்களப்பு-செங்கலடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தையும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார்.செங்கலடி பிரதேசத்திலிருந்து காத்தான்குடிக்கு மண்ணை கடத்த முற்பட்ட வேளையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று காலை மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான சந்தேக நபர்கள் மற்றும் மணல் ஏற்றிய வாகனம் இயந்திரங்கள் என்பன மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.