60 வருடங்களின் பின்னர் மலேரியா நோய்க்காக வழங்கப்படும் தடுப்பூசி மருந்துக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. உடலில் உறங்கு நிலையிலுள்ள மலேரியா நோயை சுகப்படுத்துவதற்காகவே இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நோய் ஆரம்பத்தில் அறிகுறிகளை காட்டாத போதும், நோய் கிருமிகள் ஈரலில் பல வருடங்கள் தங்கியிருக்குமென கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் மருந்தினால் குறித்த நோய் கிருமியை முற்றாக அழிக்க மு:டியும். பிலஸ் மோடியம் வைவெக்ஸ் எனும் ஒருவகை நுண்ணுயிரினால் ஏற்படும் இம்மலேரியா நோயினால் வருடாந்தம் 8.5 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர். சிறுவர்களே இந்நோயினால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். நோயினால் தாக்கப்பட்ட ஒருவரிடமிருந்து ஆரோக்கியமாகவுள்ள ஒரு மனிதனுக்கு வேறு நுளம்புகள் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளது.

தடுப்பூசி மருந்துக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி
படிக்க 1 நிமிடங்கள்