வடக்கிற்கு உதவித்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2018 15:41

வடக்கிற்கு உதவித்திட்டங்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்திருந்தபோது எங்களுடையதும், மக்களுடையதும் கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு 1990 அம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து தந்தமைக்காக இலங்கை மக்கள் சார்பில் இற்தியாவுக்கு மனமார்ந்த நன்றிகள்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1990 என்ற இலக்க சுவசரிய இலவச அம்புலன்ஸ் வாகன சேவையின் இரண்டாவது கட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமானது. இது தொடர்பான நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். இந்த வைபவம் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட இந்திய அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு பிரதமர் இதன் போது பாராட்டு தெரிவித்தார்.இலவச சுகாதார சேவையை மேலும் அர்த்தப்படுத்தும் வகையில், சுவசரிய என்ற இலவச அம்புலன்ஸ் சேவையின் மூலம் நாட்டு மக்கள் பயன் அடைவார்கள் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
.
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் சமகாலத்தில் ஏழ்மை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் சமூக சேவைகள் மற்றும் சுகாதார நல சேவைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.யாழ்.மாவட்டத்தில் பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பு, காங்கேசன்துறை துறைமுகம் விஸ்தரிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்களை இந்திய அரசாங்கம் செய்துள்ளது.
தற்போது மலையக மக்களுக்கான வீடுகளை வழங்குவதிலும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளும் கலாசார ரீதியாகவும், நட்புரீதியாகவும், எவருக்கும் அடிபணிந்தவர்கள் அல்ல. இந்த  நட்பை எவரும் குறைத்து மதிப்பீடு செய்ய இயலாது. என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
சமகால நல்லாட்சி அரசாங்கம் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. நாட்டு மக்களுக்கு ஆகக் கூடுதலான வசதிகளை செய்யும் கொள்கையை நடைமுறையில் முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக இந்த இலவச அம்புலன்ஸ் வாகன சேவை வடக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலம் அந்த மக்களின் இலவச சுகாதார தொடர்பான உரிமை உறுதி செய்யப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சுவசரிய இலவச அம்புலன்ஸ் சேவையை வடக்கில் முன்னெடுப்பதற்காக 300 அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைவாக 21 வாகனங்களை பிரதமர் ரணில் விக்கரமசிங்க இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2018 15:41

Default