கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை
Related Articles
அளுத்கம – தர்காநகர் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்கு காரணமென பொலிசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அளுத்கம சீனவத்தை பகுதியைச் சேர்ந்த 36 வயதான நபரே உயிரிழந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.