கூகுள் இணையத்தளத்தில் முட்டாள் என தேடினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புகைப்படங்கள் வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறார். அவரின் முடிவுகளுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்பொழுது அவருக்கெதிரான இணையத்தள தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் கூகுள் தேடுபொறியில் முட்டாள் என தேடினால் ட்ரம்பின் புகைப்படங்கள் காட்சியளிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இணையத்தள போராட்டத்தை மேற்கொள்பவர்கள் ரெட்டிட் எனும் இணையத்தளத்தில் ட்ரம்பின் புகைப்படத்துடன் முட்டாள் என்ற வார்த்தையை இணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பிரசாரங்களையும் குறித்த தரப்பினர் சர்வதேச ரீதியாக மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முட்டாள் என தேடினால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புகைப்படங்கள்
படிக்க 1 நிமிடங்கள்