அனுராதபுரம் தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் குறித்த வங்கி கிளையில் 9 கோடி ரூபா பெறுமதியான ரொக்கப் பணம் மற்றும் தங்க ஆபாரணங்கள் கொள்ளையிடப்பட்டன. இதனால் வங்கிக்கிளையின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சந்தையில் நிலவும் பவுண் பெறுமதிக்கு அமைய இழப்பீடு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் களவு போன ஆபரணங்களுக்கு பதிலாக அவற்றை போன்ற ஆபரணங்களை செய்து தருமாறு சில வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கோரிக்கை தொடர்பில் இலங்கை வங்கி தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாக தலாவ வங்கிக் கிளை தெரிவித்துள்ளது.

கொள்ளை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு
படிக்க 1 நிமிடங்கள்