fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கரடி தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 20, 2018 12:34

கரடி தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதி

கரடி தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவவீரர் ஒருவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு நந்திமுறிப்பு வனப்பகுதியில் வைத்து இராணுவ வீரர் மீது கரடி தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த வனப்பகுதிக்கு அருகிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் தேவையொன்றுக்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். இதன்போது திடீரென பாய்ந்த கரடி இராணுவ வீரரை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் இராணுவ வீரரின் தலை மற்றும் முகப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 20, 2018 12:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க