அமெரிக்காவில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். மிஷுரி மாநிலத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற படகு டேபிள் லொக் ஏரியின் மையப்பகுதியை அடைந்தபோது திடீரென கவிழ்ந்துள்ளது. பயணிகள் உதவி கேட்டு கூக்குரலிட்டனர். விரைந்து செயற்பட்ட மீட்பு படையினர் 7 பேரை காப்பாற்றியுள்ளனர். சம்பவத்தில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்த சம்பவம் மிஷுரி மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சுற்றுலா பயணிகள் படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலி
படிக்க 0 நிமிடங்கள்