fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இஸ்ரேலின் சுய நிர்ணய உரிமையை யூதர்களுக்கு உரித்தாக்கும் சட்டம் நிறைவேற்றம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2018 18:23

இஸ்ரேலின் சுய நிர்ணய உரிமையை யூதர்களுக்கு உரித்தாக்கும் சட்டம் நிறைவேற்றம்

இஸ்ரேல் நாட்டின் சுயநிர்ணய உரிமைகள் யூதர்களுக்கு மாத்திரமே உள்ளதென பிரகடனப்படுத்தும் சட்டத்தை அந்நாட்டு அரசு நிறைவேற்றியுள்ளது. பல மாதங்களாக நீடித்துவந்த இது தொடர்பான வாதங்களுக்கு மத்தியில் இன்று இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

120 உறுப்பினர்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில், 62 பேர் இதற்கு ஆதரவாகும், 55 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இச்சட்டம் இனவாதத்தை தூண்டுமென தெரிவித்து அரபு சிறுபான்மை உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கோஷமிட்டதோடு, ஆவணங்களை கிழித்தெறிந்தனர். எவ்வாறெனினும் யூதர்களுக்கு மாத்திரமே சுய நிர்ணயம் உண்டு என்ற சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ இது வரலாற்றில் குறிப்பிடத்தக்க தருணமென தெரிவித்துள்ளார். எனினும் இவ்விடயம் அரேபிய குடிமக்களுக்கும், அரேபிய சிறுபான்மையினருக்கும் எதிராக முற்றிலும் பாகுபாடு காட்டும் விடயமென இஸ்ரேல் அரேபிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2018 18:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க