விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென வெளியில் இருந்து எடுத்துவரப்படும் உணவு உள்ளிட்ட ஏனைய பொருட்களை கடும் பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 5 சிறைச்சாலைகளில் தனிப்பட்ட அதிகாரிகளின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் இவ்வாறான கைதிகள் குழுக்களாக பிரிந்து செயற்படுகின்றமை பிரச்சினையாக காணப்படுகிறது. அதனால் குறித்த சிறைக்கைதிகளை பல பிரிவுகளின் கீழ் தெரிவுசெய்து சிறை வைத்து, தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகளை மாத்திரம் அங்கு கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
