fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளை 9 மணிநேர நீர்விநியோக தடை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2018 11:26

நாளை 9 மணிநேர நீர்விநியோக தடை

கொழும்பின் சில பிரதேசங்களில் நாளை 9 மணிநேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. நாளை இரவு 09.00 மணிமுதல் நாளை மறுதினம் காலை 06.00 மணிவரை இந்நீர்விநியோக தடை அமுலில் இருக்கும். களனி பாலத்திலிருந்து, தெமட்டகொட வரையுள்ள பேஸ்லைன் வீதி பகுதி, கடற்கரை வீதி மற்றும் கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாமைப்புச்சபை தெரிவித்துள்ளது. மேலும் புறக்கோட்டை பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2018 11:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo