fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகிற்கும் சுவசெரிய எம்பியூலன்ஸ் சேவை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2018 18:40

வடகிற்கும் சுவசெரிய எம்பியூலன்ஸ் சேவை

1990 சுவசெரிய எம்பியூலன்ஸ் வண்டி சேவையின் 2வது கட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வைபவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வடமாகாணத்தை மையப்படுத்தி இடம்பெறவுள்ளது. 20 எம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக எம்பியூலன்ஸ் வண்டி சேவையின் நடவடிக்கை முகாமையாளர் கயான் ச்சதுரங்க தெரிவித்துள்ளார். 2ம் கட்டத்தின் ஊடாக 209 எம்பியூலன்ஸ் வண்டிகள் நாடு பூராகவும் சேவையில் ஈடுபடுத்தப்படும். முதற்கட்டமாக 20 எம்பியூலன்ஸ் வண்டிகள் வடக்கில் சேவையில் ஈடுபடவுள்ளதாக கயான் ச்சதுரங்க குறிப்பிட்டார்.

இதேவேளை 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் எம்பியூலன்ஸ் வண்டி சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். நோயாளிகள் தமது வீடுகளுக்கே எம்பியூலன்ஸ் வண்டியை அழைக்க முடியும். திட்டம் மேல் மாகாணத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதற்கமையவே நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இலவச எம்பியூலன்ஸ் வண்டி சேவையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2018 18:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க