fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிகாரத்திற்கும் துஷ்பிரயோகத்திற்குமிடையிலான தொடர்பை துண்டிக்க இலங்கை நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2018 18:06

அதிகாரத்திற்கும் துஷ்பிரயோகத்திற்குமிடையிலான தொடர்பை துண்டிக்க இலங்கை நடவடிக்கை

அதிகாரத்திற்கும் துஷ்பிரயோகத்திற்குமிடையிலான தொடர்பை துண்டிக்க இலங்கை அரசாங்கம் கடந்த 3 வருடங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜோர்ஜியாவில் நடைபெறும் திறந்த அரச கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திறந்த அரச கூட்டுறவுக்காக இலங்கை மேற்கொண்ட அடிப்படை செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி தனது உரையின் போது விளக்கினார்.

தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போது உலகில் எந்த நாட்டு தலைவருக்கும் இல்லாத அதிகாரங்கள் இலங்கை ஜனாதிபதியிடம் காணப்பட்டது. எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு இருந்த அதிகாரங்களை தான் குறைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரத்துடன் துஷ்பிரயோகம் கைகோர்க்கும். இதனால் தனது முதற்பணியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் காணப்பட்ட அதிகாரங்களை குறைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கியதன் மூலம் பாராளுமன்றம் பலப்படுத்தப்பட்டது. இலங்கையின் நீதிமன்றங்கள் அரசியல் அழுத்தங்களினால் மோசமான நிலையில் காணப்பட்டன. தரம் குன்றிய நிலையிலிருந்தன. நீதித்துறையில் எந்தவொரு அரசியல்வாதிக்கும் கைவைக்க முடியாத விதத்தில் நீதித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பான சுயாதீன ஆணைக்குழுவின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு தலையிட முடியாத விதத்தில் ஆணைக்குழு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

திறந்த அரச கூட்டுறவு தலைவர்களின் மாநாடு ஜோர்ஜியாவின் டிபிலிசி நகரில் இடம்பெறுகிறது. திறந்த அரச கூட்டுறவு நாடுகளின் பிரஜைகள் தொடர்பில் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், மக்கள் பங்குபற்றுதலை மேம்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. ஜோர்ஜியா பிரதமர் தலைமையில் ஆரம்பமான மாநாட்டில் 75 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

“]

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2018 18:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க