மத்திய மாகாண பாடசாலை விளையாட்டு விழாவில் புதிய சாதனையொன்று படைக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு கீழான போட்டிப்பிரிவில் தூரம் பாய்தலில் பெண்களுக்கான போட்டியில் நோட்டன் பிரிஜ் விதுலிபுர வித்தியாலய மாணவி புதிய சாதனை படைத்தார். 3.98 மீற்றர் தூரம் பாய்ந்த சித்தாரா அஞ்சலிகா என்ற மாணவி சாதனை படைத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 2018ம் ஆண்டுக்கான மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளும் கடந்த 6ம் திகதி முதல் 4 நாட்களுக்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போதே இம்மாணவி குறித்த சாதனையை படைத்துள்ளார்.

மத்திய மாகாண விளையாட்டு விழாவில் நோட்டன் பிறிஜ் மாணவி புதிய சாதனை
படிக்க 0 நிமிடங்கள்