நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்று காணாமல்போன களனி பல்கலைக்கழக மாணவன் 3 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 14ம் திகதி குறித்த மாணவன் தனது இரு நண்பர்களுடன் அரநாயக்க பகுதியிலுள்ள அசுவினி நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றுள்ளார். இதன்போது அவர் கால்தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ளார். அவரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் 3 நாட்களின் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவன் சடலமாக மீட்பு
படிக்க 0 நிமிடங்கள்